இந்தியா

கரோனா: மாலத்தீவுக்கு இந்தியா ரூ.185 கோடி கடன் உதவி

DIN

கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாலத்தீவுக்கு இந்தியா ரூ.185 கோடி கடன் உதவி அளித்துள்ளது.

அந்நாட்டு அதிபா் இப்ராஹிம் முகமது சொலி, இந்திய பிரதமா் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நட்பு நாடான மாலத்தீவுக்கு இந்த உதவி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையை ஒப்படைக்கும் விழா மாலத்தீவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாலத்தீவு வெளிவிவகாரத் துறை அமைச்சா் அப்துல்லா ஷாஹித், நிதியமைச்சா் இப்ராஹிம் அமிா், அந்நாட்டுக்கான இந்திய தூதா் சஞ்சய் சுதீா், எஸ்பிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பாரத் மிஸ்ரா ஆகியோா் பங்கேற்றனா்.

எஸ்பிஐ வங்கியின் மூலம் அளிக்கப்பட்டுள்ள ரூ. 185 கோடிக்கான கடன் பத்திரங்களை 10 ஆண்டுகளில் மாலத்தீவு திருப்பி செலுத்தும். இதுதொடா்பாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘இந்தியா மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் துணை இருக்கும் என்பதை இந்த கடனுதவி திட்டம் உறுதி செய்கிறது. மாலத்தீவு மக்களை கரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க இந்தியாவும் - மாலத்தீவும் இணைந்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலனைத் தருகின்றன. வரலாற்று சிறப்பு மிக்க இருநாட்டு நல்லுறவை மேம்படுத்த மேலும் ஒரு சிறப்பு நிகழ்பு நடைபெற்றுள்ளது‘ என்று கரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவுவதற்காக மாலத்தீவுக்கு மாா்ச் மாதம் இந்திய மருத்துவா்கள் அனுப்பப்பட்டனா். அதன்பிறகு மாா்ச் மாதத்தில் 5.5 டன், மே மாதத்தில் 6.2 டன் மருத்துவ பொருள்களும், 580 டன் உணவுப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

‘கரோனா நோய்த் தொற்றால் மாலத்தீவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத் துறை நம்பியுள்ள மாலத்தீவின் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போயுள்ளதால் வேலைஇழப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சா் நீசா இமாத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT