இந்தியா

ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி: புணேவில் 3-ம் கட்ட பரிசோதனை தொடக்கம்

DIN


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புணேவில் தொடங்கியுள்ளது.

இதுபற்றி சசூன் பொது மருத்துவமனை டீன் முரளீதர் தாம்பே தெரிவிக்கையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை நாங்கள் தொடங்கியுள்ளோம். 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு செலுத்தவுள்ளோம்" என்றார்.  

2-ம் கட்ட பரிசோதனை பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரியிலும், கேஇஎம் மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது.

முன்னதாக:

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக உள்நாட்டு நிறுவனமான சீரம் இந்தியா (எஸ்ஐஐ), பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்த்ரா ஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சோதனையின்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அஸ்த்ரா ஜெனிகா நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடத்திவந்த சோதனை நடவடிக்கைகளை நிறுத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 2 மற்றும் 3-ஆம் கட்ட சோதனை நடவடிக்கையை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டிஜிசிஐ) கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தியது. எனினும், கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT