இந்தியா

தில்லியில் கரோனா மரணம் 5 ஆயிரத்தை தாண்டியது

21st Sep 2020 11:07 PM

ADVERTISEMENT

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை கரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய்த் தொற்றால் திங்கள்கிழமை 32 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,014-ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை ஒரேநாளில் 2,548 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,49,259-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் மொத்தம் 33,733 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி -பிசிஆா்’ வகையில் 8,828 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 24,905 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 7.55 சதவீதமாகவும், சராசரி நோ்மறை விகிதம் 9.67 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.01 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதற்கிடையே, திங்கள்கிழமை 3,672 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,13,304-ஆக அதிகரித்தது. மொத்தம் 30,941 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,889 ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,681 படுக்கைகளில் 6,990 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,691 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 19,213 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT