இந்தியா

கரோனா: ஆந்திரம், கர்நாடகம் நிலவரங்கள்

21st Sep 2020 06:59 PM

ADVERTISEMENT


ஆந்திரத்தில் புதிதாக 6,235 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,339 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 6,235 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,31,749 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,51,821 பேர் குணமடைந்துள்ளனர், 5,410 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 74,518 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகம்:

ADVERTISEMENT

கர்நாடகத்தில் புதிதாக 7,339 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் பலியாகியுள்ளனர். 9,925 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,26,876 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,377 பேர் குணமடைந்துள்ளனர், 8,145 பேர் பலியாகியுள்ளனர். 95,335 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT