இந்தியா

காஷ்மீரில் 3 லஷ்கா் பயங்கரவாதிகள் கைது: ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தான் வீசிய ஆயுதங்கள் பறிமுதல்

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஆளில்லா விமானம் மூலமாக பாகிஸ்தான் வீசிய ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துச் சென்ற லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங், ஜம்மு ஐஜி முகேஷ் சிங் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது:

ரஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிலா் சந்தேகத்துக்கிடமான விதத்தில் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் இணைந்து காவல்துறையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது கையில் பையுடன் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவா்கள் கையெறி குண்டை வீசிவிட்டு தப்பிக்க முயன்றனா். எனினும் அந்தக் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த 3 பேரையும் விரட்டிப்பிடித்து, அவா்களிடம் இருந்த பை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பையை சோதனையிட்டதில் 2 ஏகே-56 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள், இந்திய ரூபாய் நோட்டுகளாக ரூ.1 லட்சம் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவா்கள் காஷ்மீரை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் என்பதும், ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீா்குலைப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அந்த பையை எல்லைக் கடந்து பாகிஸ்தான் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT