இந்தியா

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

20th Sep 2020 02:06 PM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடா்பான 3 மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

‘விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா’, ‘அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இம்மசோதாக்களை தாக்கல் செய்தார். 

இதில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, முதல் இரண்டு மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நிலவி வருகிறது. 

Tags : Rajyasabha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT