இந்தியா

உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் தலைமறைவு

19th Sep 2020 12:48 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் வசித்துவரும் இளைஞர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை தமது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போப்பா நகர காவல்துறையினர் இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனையறிந்து தலைமறைவான இளைஞரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தொடர்கதையாகும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT