இந்தியா

வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தைகள் பலி: ஆலையில் சோதனை

19th Sep 2020 03:58 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் புகழ்பெற்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட இரண்டுக் குழந்தைகள் பலியானதை அடுத்து, பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமையன்று இந்த பிஸ்கெட் நிறுவனத்தின் க்ரீம் வேஃபர் பிஸ்கெட்டை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம் அடைந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஆய்வு நடத்திய உணவுத் துறை அதிகாரிகள், அங்கு பிஸ்கெட் தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருள்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கெட்டின் மாதிரிகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT