இந்தியா

70-வது பிறந்தநாள்: வாழ்த்து மழையில் நனையும் பிரதமர் மோடி

17th Sep 2020 11:56 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பாஜக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துகள், நீங்கள் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். உங்களது சிறப்பான சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மோடிக்கு தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஓய்வில்லா முயற்சிகளால், நாடு புதிய உச்சத்தை எட்டும், அவரது அயராத பணியின் மூலமாக, நாடு தற்சார்பை அடையும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ''பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சர்வ வல்லமையுடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிக நீண்ட வாழ்க்கை அமைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டுள்ளார்.

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT