இந்தியா

பரிசோதனையே செய்து கொள்ளாத 15 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது எப்படி?

17th Sep 2020 12:25 PM

ADVERTISEMENT


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பரிசோதனையே செய்து கொள்ளாத 15 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தார் மாவட்டம் நிசர்புர் பகுதியல் உள்ள தானா கிராமத்தில், கிராம மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 8-ம் தேதி தானா கிராமத்துக்குச் சென்ற இரண்டு ஊழியர்கள், கிராமத்தில் இருந்த நான்கு பேரிடம் சளி மற்றும் உமிழ்நீர் மாதிரிகளை எடுத்துள்ளனர்.

மற்றவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வரவில்லை மற்றும் சிலர் பரிசோதனைக்கு பயந்து கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், சுமார் 19 பேரிடம் மாதிரிகளை பெற்றுக் கொண்டு வந்ததாகக் கூறி ஆய்வுக் கூடத்தில் கொடுத்துள்ளனர். அந்த 19 பேரில் 17 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்த கிராமத்தில் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை கொடுத்த நான்கு பேரில் இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே வேளை பரிசோதனையே செய்து கொள்ளாத அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

இது பற்றி ஹர்ஜித் முஜால்டே என்பவர் கூறுகையில், கரோனா பரிசோதனை செய்து கொள்ளாமலேயே தொற்று உறுதி செய்யப்பட்ட 15 பேரில் நானும் ஒருவர். பரிசோதனைக்கு வரும் போது நான் கிராமத்திலேயே இல்லை. பிறகு எப்படி எனக்கு கரோனா உறுதி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தார் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கரோனா பரிசோதனையில் காணப்படும் மெத்தனப் போக்குக் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT