இந்தியா

மேற்குவங்கத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

11th Sep 2020 11:53 AM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 4-ஆம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாளை (சனிக்கிழமை) விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கும் திரும்பபெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெற உள்ளதால், அதில் கலந்துகொள்ளும் வகையில் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லும் வகையில் முழு ஊரடங்கை திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின்படி நாளை முழு ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கள் கிழமை முதல் மேற்குவங்கத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : WestBengal
ADVERTISEMENT
ADVERTISEMENT