இந்தியா

அக்டோபரில் நாட்டின் கரோனா பாதிப்பு 70 லட்சத்தை எட்டும்!

11th Sep 2020 12:21 PM

ADVERTISEMENT

ஹைதராபாத்: இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டும் என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் கரோனா பாதிப்பில் முதல்நிலையில் உள்ள அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 45 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி கரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது.  
 
இதனிடையே ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் பயன்பாட்டு கணிதவியல் துறையின் தலைவரான டாக்டர் ராதிகா, புள்ளிவிர கற்றல் நுட்பங்களின் அடிப்படையில் நாட்டில் கரோனா பரவல் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில் தற்போதுள்ள தரவுகளுக்குப் பயன்படுத்தப்படும் புள்ளிவிவர கற்றல் நுட்பங்களின் அடிப்படையில் ஒரு மாதிரியைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிர்காலத்தில் தொற்று பரவும் விகிதம் கணக்கிடப்பட்டது.

இதில் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு 70 லட்சத்தை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிக அளவிலாக கரோனா பரிசோதனைகள் இந்த இலக்க பாதிப்பை எளிதில் அடையும். மேலும் தற்போது கரோனா பரவலை கணக்கிடுவதை போன்று நீண்ட காலத்திற்கான பரவலை கணக்கிடும் பணியிலும் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT