இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமை லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

5th Sep 2020 12:53 PM

ADVERTISEMENT


ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ராம்பன் மாவட்டத்தில் காஷ்மீர் செல்லும் இரண்டு சுமை லாரிகள் சாலையிலிருந்து தவறி விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

டிக்டோல் அருகே சுமை லாரி மற்றும் கோழிகளை ஏற்றி வந்த லாரியும் சுமார் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று காலை 4 மணிக்கு நடந்துள்ளது. 

இந்த விபத்தில் 32 வயதான ஓட்டுநர் அகமது மற்றும் அவருடன் வந்த முகமது உஸ்மான் ஆகியோர் உயிரிழந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் ஏராளமான கோழிகளும் உயிரிழந்தன என்றார்.

இறந்தவர்கள் இருவரும், ராம்சூவின் மாகர்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  உடலை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று காவல் அதிகாரி தெரிவித்தார். 

ADVERTISEMENT

மற்றொரு விபத்து, பானிஹால் அருகே சமஸ்வாஸில் சரக்கு லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 19 வயது இளைஞன் உயிரிழந்தார் மற்றும் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர். 

விபத்து நடைபெற்ற சரக்கு லாரி ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குச் சென்று கொண்டிருந்தது. அதிலிருந்த மூவரும் புல்வாமா மாவட்டத்தின் பாம்பூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

Tags : accident
ADVERTISEMENT
ADVERTISEMENT