இந்தியா

கரோனா நோயாளிகள் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டக்கூடாது: பஞ்சாப் முதல்வர்

4th Sep 2020 06:18 PM

ADVERTISEMENT


சண்டிகர்: கரோனா பாதிப்பைவிடவும் பயங்கரமானது என்னவென்றால், வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதும், தகரம் அடித்து தனிமைப்படுத்துவம்தான். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் இனி அந்த நடைமுறை தொடராது.

கரோனா பேரிடரை சமாளிக்கும் வகையில் பஞ்சாப்பில் மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இனி கரோனா பாதித்த நோயாளிகள் இருக்கும் வீட்டின் வாயிலில், நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுளள்ர்.

ஏற்கனவே, கரோனா நோயாளிகள் வீடுகளில் ஒட்டப்பட்டிருக்கும் நோட்டீஸ்களை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் இதுபோன்று நோட்டீஸ் ஒட்டப்படுவது, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே உருவாக்குகிறது. இதனால், கரோனா பரிசோதனை செய்து கொள்ளவே மக்கள் தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கும் முதல்வர் அமரீந்தர் சிங், மக்கள் தாமாக முன் வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள், தொற்று இருந்தால் சிகிச்சை பெற்று குணமடையலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT