இந்தியா

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை மொழிபெயர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

4th Sep 2020 11:31 AM

ADVERTISEMENT


புது தில்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை 22 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கையை மொழிபெயர்த்து வெளியிடுமாறு பிறப்பித்த தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
 

Tags : high court
ADVERTISEMENT
ADVERTISEMENT