இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 38 லட்சத்தை தாண்டியது

3rd Sep 2020 10:36 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை புதன்கிழமை 38 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 83,883 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,53,407-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வியாழக்கிழமை காலை வரை கரோனா பாதிப்பிலிருந்து 68,584 பேர் குணமடைந்ததை அடுத்து  குணமடைந்தோா் எண்ணிக்கை  29,70,493 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 76.98 சதவீதம் ஆகும். கரோனாவுக்கு புதிதாக 1,043 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 67,376-ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.76 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் 8,15,538 போ் (21.26 சதவீதம்) சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,02,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பாகும்.  

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,55,09,380 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 11,72,179 பரிசோதனைகள் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 38,53,407
பலி: 67,376
குணமடைந்தோர்:  29,70,493
சிகிச்சை பெற்று வருவோர்: 8,15,538 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT