இந்தியா

ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து ரஷியாவிற்கு செல்லும் ஜெய்சங்கர்

3rd Sep 2020 06:39 PM

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவிற்கு செல்ல உள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான ஆலோசனையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் பயணமாக நேற்று (புதன்கிழமை) ரஷியா புறப்பட்டுச் சென்றார்.

இதனைத்தொடர்ந்து வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவிற்கு செல்ல உள்ளார். இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யும் கலந்துகொள்ள உள்ளார். 

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

ADVERTISEMENT

நேட்டோவிற்கு எதிராக கருதப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு, ஆர்க்டிக் பெருங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருந்து பால்டிக் கடல் வரை பரவியிருக்கும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 44 சதவீதத்தினரைக் கொண்ட நாடுகளின் மூலம் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இதில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tags : Jaishankar
ADVERTISEMENT
ADVERTISEMENT