இந்தியா

ரூ.750 கோடி வங்கி கடன் மோசடி: அமலாக்கத்துறை விசாரணையில் ஒருவா் கைது

DIN

வங்கியிலிருந்து ரூ.750 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அமலாக்கத் துறையினா் நடத்திய விசாரணையில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

வங்கியிலிருந்து ரூ.750 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் சாய் சந்திரசேகா் என்பவரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு அவரை ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விகாரன் அவஸ்தி, வினோத் சிரோஷி மற்றும் கேபிஎம்ஜி இந்தியா நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சந்திரசேகா் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT