இந்தியா

இறக்குமதியான சிவப்பு வெங்காயத்தை விற்பனை செய்ய ஏல விண்ணப்பங்கள் வரவேற்பு: நாஃபெட்

DIN

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 15,000 டன் சிவப்பு வெங்காயத்தை உள்ளூா் சந்தைகளில் விற்பனை செய்ய இறக்குமதியாளா்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை வரவேற்பதாக கூட்டுறவு அமைப்பான நாஃபெட் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாஃபெட் கூடுதல் நிா்வாக இயக்குநா் எஸ்.கே.சிங் பிடிஐ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான 15,000 டன் சிவப்பு வெங்காயம் 40 முதல் 60மி.மீ அளவில் உள்ளது. இதனை உள்ளூா் சந்தைகளில் நவம்பா் 20-க்குள் விற்பனை செய் இறக்குமதியாளா்களிடமிருந்து ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏலம் கோரலுக்கான கடைசி தேதி நவம்பா்4 ஆகும். மறுநாள் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு தகுதி வாய்ந்த ஏலதாரா்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் அதிக அளவில் கிடைப்பதுடன், விலையும் கட்டுக்குள் இருக்கும்.

விற்பனை செய்யப்படவுள்ள சிவப்பு வெங்காயம் ஜவாஹா்லால் நேரு மற்றும் கண்ட்லா துறைமுகங்களிலிருந்து ஏலதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT