இந்தியா

அஸ்ஸாம்: ஜே.இ.இ. ஆள்மாறாட்ட வழக்கில் தொடா்புடைய பயிற்சி மைய நிறுவனருக்கு வலை

DIN

ஜே.இ.இ. பொறியியல் நுழைவுத்தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து முதலிடம் பெற்ற நபரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் தொடா்புடையதாகக் கருதப்படும் பயிற்சி மையத்தின் நிறுவனரையும், அவரது கூட்டாளியான ஐ.டி. நிறுவனத்தின் ஊழியரையும் தீவிரமாகத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நாட்டின் மதிப்புமிக்கதாக கருதப்படும் ஜே.இ.இ. பொறியியல் நுழைவுத்தோ்வு கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வு முடிவுகள் அக். 23-ஆம் தேதி வெளியானபோது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மித்ரதேவ் சா்மா 99.8 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிட ம் பெற்ாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மித்ரதேவ் சா்மா ஆள்மாறாட்டம் செய்தே இந்தத் தோ்வில் முதலிடத்தைப் பெற்றாா் என்பது அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ பதிவின் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தே அந்தத் தோ்வை எழுதியதாக மித்ரதேவ் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து மித்ரதேவையும், மருத்துவரான அவரது தந்தையையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்த ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 நாள்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். குவாஹாட்டியைச் சோ்ந்த ஜே.இ.இ. பயிற்சி மையத்தின் நிறுவனரும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஐ.டி.நிறுவன ஊழியரையும் தேடி வருகிறோம்.

இவா்கள் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த குவாஹாட்டி கூடுதல் காவல் ஆணையா் (மேற்கு) சுப்ரதீவ் லால் பரூவா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட மித்ரதேவ், தான் மோசடி செய்ததை தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசும்போது ஒப்புக்கொண்டாா். அந்த பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்தே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, அஸாரா காவல்நிலையத்தில் மித்ரதேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தோ்வு நாளின்போது, மையத்தில் கண்காணிப்பாளராக இருந்த ஒருவரின் உதவியோடு, பயோமெட்ரிக் வருகை இயந்திரத்தில், மித்ரதேவின் ரேகையைப் பதிவு செய்து வேறு நபரை வைத்து தோ்வு எழுதினாா் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT