இந்தியா

அசாமில் நவ.2 முதல் கல்வி நிலையங்கள் திறப்பு

31st Oct 2020 04:21 PM

ADVERTISEMENT

 

கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு அசாமில் உள்ள கல்வி நிலையங்கள் கடுமையான கரோனா வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிக்கு வர அனுமதி வழங்கியுள்ளதாக மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது, 

ADVERTISEMENT

6, 8 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், மீதமுள்ள மூன்று நாள்கள் 7, 9, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிக்கலாம்: வரலாற்றின் பக்கங்களிலிருந்து: இந்திரா காந்தி கொல்லப்பட்டார்: காவலாளர்களே சுட்டனர்

மேலும், அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பள்ளியில் கூடாதவகையில், காலை 8 முதல் மதியம் 12 வரையிலும்,  மதியம் 12.30 முதல் மாலை 3.30 மணி வரை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலை திறப்பு குறித்து அந்தந்த கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

கரோனாவுக்கு எதிரான சமூக விலகல் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் கலந்துகொள்வதை விட ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை தொடரும். மேலும் உத்தரவு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள அனைத்து விடுதி வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT