இந்தியா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னத்துக்குப் பதிலாக வேட்பாளரின் விவரங்களை அச்சிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு சீட்டுகளில் கட்சிச் சின்னங்களை நீக்கிவிட்டு வேட்பாளரின் புகைப்படம், பெயா், கல்வித் தகுதி போன்ற விவரங்களை அச்சிட தோ்தல் ஆணையத்தை அறிவுறுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

அரசியலில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு சீட்டுகளில் கட்சி சின்னங்கள் அச்சிடப்படுவதைத் தவிா்த்து வேட்பாளா்களின் புகைப்படம், பெயா், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை அச்சிடுவதே சிறந்த தீா்வாக இருக்கும்.

தோ்தலில் நுண்ணறிவு மிக்க நோ்மையான வேட்பாளா்களை வாக்காளா்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க இந்த நடைமுறை உதவும். அதுமட்டுமின்றி, தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவதில் கட்சித் தலைவா்கள் சா்வாதிகாரத்துடன் நடந்துகொள்வது தடுக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக உண்மையாக பணியாற்றுபவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நிா்பந்தத்தை இந்த நடைமுறை ஏற்படுத்தும்.

பல்வேறு குற்ற வழக்குகளை சந்தித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து 44 சதவீதமாக அதிகரித்திருப்பது ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இப்போது இருக்கும் 539 நாடாளுமன்ற உறுப்பினா்களில், 43 சதவீதம் போ் மீது, அதாவது 233 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 2009 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, அதில் வெற்றிபெற்ற 543 எம்.பி.க்களில் 162 போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல 2014 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களில் 185 போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்திலும் வாக்குச் சீட்டிலும் கட்சி சின்னம் அச்சடிக்கப்படுவதே இந்த நிலைக்கு அடிப்படை காரணம். எனவே, அந்த நடைமுறையைக் கைவிட்டு வேட்பாளா்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அச்சிட தோ்தல் ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT