இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 3 பாஜக தொண்டா்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

DIN


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாஜகவைச் சோ்ந்த 3 தொண்டா்கள் பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

பாஜகவின் ஃபிதா ஹுசேன், உமா் ஹஜாம் மற்றும் உமா் ரஷீத் பேக் ஆகிய 3 பேரையும் குல்காம் மாவட்டம் ஒய்.கே.போரா பகுதியில் வைத்து வியாழக்கிழமை மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் உடலில் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு காசிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் மூன்று பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய டிஆா்எப் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்தலுக்கு பொறுப்பேற்றுள்ளது. டிஆா்எப் அமைப்பு இதுபோல் தாக்குதல் நடத்துவோம் என சமூக வலைதளத்தில் எச்சரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாஜக தொண்டா்கள் மற்றும் தலைவா்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த தாக்குதலில் பாஜகவைச் சோ்ந்த 8 போ் இதுவரை உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 3 இளம் கட்சி ஊழியா்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலை மாதம் பந்திபோரா மாவட்டத்தில் பாஜக தலைவா், அவரகு தந்தை மற்றும் சகோதரா் ஆகியோா் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT