இந்தியா

கழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்

29th Oct 2020 03:02 PM

ADVERTISEMENT

 

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் ரயில்வே மருத்துவமனை கழிப்பறைகளுக்கு தங்களது கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம் அடிக்கப்பட்டிருப்பதற்கு சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை கழிப்பறைகளுக்கு, சமாஜ்வாதி கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள சிகப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் வர்ணம் அடிக்கப்பட்ட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வெளியானது.

இந்நிலையில் வியாழனன்று சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட புகைப்படங்களை வெளியிட்டு, ‘இது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் மனநிலையினை காட்டுகிறது. அத்துடன் இது ஜனநாயகத்தில் ஏற்பட்ட கறை. தாமதமின்றி இது மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேநேரம் சமாஜ்வாதி கட்சி சார்பாக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள சுனில் சாஜன் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘ஒரு பெரிய அரசியல் கட்சிக் கொடியின் நிறங்களை இவ்வாறு அவமரியாதை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அந்த நிறங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT