இந்தியா

நினைவில் கொள்ளுங்கள்.. வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

28th Oct 2020 09:14 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில், அனைவரும் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மேலும் படிக்க.. கரோனா நோயாளியைக் காக்க உயிரைப் பணயம் வைத்த குஜராத் மருத்துவா்!

ADVERTISEMENT

வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள் என்னவென்றால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரண்டு அடி இடைவெளியைப் பின்பற்றுங்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Tags : pm modi bihar poll
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT