இந்தியா

4ஆவது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்குத் தடை விதித்த ஹாங்காங் அரசு

28th Oct 2020 06:51 PM

ADVERTISEMENT

பயணிகளுக்கு கரோனா உறுதியாவதாகக் கூறி ஏர் இந்தியா விமானங்களை நவம்பர் 10 ஆம் தேதி வரை ஹாங்காங் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் அரசு தடைசெய்வது இது நான்காவது முறையாகும்.

ஜூலை மாதம் ஹாங்காங் அரசு விதித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணிநேர முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியாகாத சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும்.

இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் ஏர் இந்தியாவின் மும்பை-ஹாங்காங் விமானத்தில் பயணித்த சில பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பது இது 4ஆவது முறையாகும்.

முன்னதாக செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 மற்றும் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 30 வரையிலான தேதிகளில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : air india
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT