இந்தியா

ரூ.2.35 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகளைத் திருடிய நால்வர் கைது

27th Oct 2020 12:33 PM

ADVERTISEMENT

 

புணேவில் விவசாயியிடம் இருந்து ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூட்டைகளைத் திருடிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணே புறநகர் காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புணேவில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கடந்த 21-ம் தேதி திருடுப்போனதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 9 வெங்காய மூட்டைகளை திருடர்கள் விற்றுவிட்டது தெரிய வந்துள்ளது.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காய வரத்துக் குறைந்ததால், விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனையில் ரூ.100 தொட்டுவிட்ட வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது ரூ.100-க்குக் குறைவாக விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், விற்பனைக்காக வைத்திருந்த வெங்காய மூட்டைகளை நான்கு பேர் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

Tags : onion
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT