இந்தியா

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

26th Oct 2020 06:02 PM

ADVERTISEMENT


இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பெரை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.

அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பெர் 2+2 பேச்சுவார்த்தைக்காக இன்று இந்தியா வந்தடைந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்க் எஸ்பெரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப் படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதௌரியா மற்றும் கடற்படை தலைமைத் தளபதி கரம்வீர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். 

அமெரிக்கா, இந்தியா இடையிலான மூன்றாவது 2+2 அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் 4 முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், ராணுவ கலந்துரையாடல்கள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

முதலிரண்டு 2+2 அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 2018-இல் புதுதில்லியிலும், 2019-இல் வாஷிங்டனிலும் நடைபெற்றன.
 

Tags : rajnath singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT