இந்தியா

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு கரோனா தொற்று

DIN

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருபவர் அஜித் பவார். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட அஜித் பவார் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம்தான் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று புதிதாக 6,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,45,020 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,264 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 1,40,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மொத்தம் 14,60,755 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT