இந்தியா

குஜராத் இடைத்தேர்தல்: 2019-இல் சாதித்ததை மீண்டும் சாதிக்குமா காங்கிரஸ்?

26th Oct 2020 04:47 PM

ADVERTISEMENT


குஜராத்தில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சி மாறிய அல்பேஷ் தாக்குரை வீழ்த்தியதுபோல், இம்முறை அதிருப்தியாளர்களை வீழ்த்துவதில் காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்ததால், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பரத் சிங் தோல்வியடைந்தார். எம்எல்ஏ-க்களின் ராஜிநாமா காரணமாக 8 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த 8 தொகுதிகளுள் 5 தொகுதிகளில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது பாஜக.

இதுகுறித்து குஜராத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் சதவ் தெரிவிக்கையில், "மக்கள் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்போகின்றனர். ஒட்டுமொத்த உலகமே பெருந்தொற்றால் நெருக்கடியிலிருந்தபோது, பாஜக மற்றும் அதிருப்தியாளர்கள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டிருந்தனர்" என்றார். 

ADVERTISEMENT

2019 இடைத்தேர்தலில் என்ன நடந்தது?

2017 குஜராத் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அல்பேஷ் தாக்குர். அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இதையடுத்து, கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று கருதி அவர் பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே ராதன்பூர் தொகுதியில் அல்பேஷ் தாக்குர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ரகு தேசாயிடம் அவர் தோல்வியடைந்தார்.

இதேபோன்று இம்முறையும் கட்சியிலிருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிடும் அதிருப்தியாளர்களை வீழ்த்துவதில் காங்கிரஸ் முனைப்பு காட்டி முயற்சித்து வருகிறது.

Tags : bypoll
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT