இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 78,64,811: குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரிப்பு

25th Oct 2020 10:20 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உள்ளது. தொற்றில் இருந்து இதுவரை 70 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 90.00 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 50,129 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78,64,811-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 62,077 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 90.00 சதவீதமாகும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 578 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,18,534-ஆக அதிகரித்தது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் 6,68,154 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 8.50 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 24-ஆம் தேதி வரை 10,25,23,469 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் 11,40,905 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT