இந்தியா

உ.பி.யில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு

25th Oct 2020 05:15 PM

ADVERTISEMENT

 உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,70,270-ஆக அதிகரித்துள்ளது.

இதில் கரோனா தொற்றால் 27,317 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,36,071-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

 இதனால் குணமடைவோர் விகிதம் 93.27 சதவிகிதமாக உள்ளது.

இதுவரை 1.40 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 28 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,882-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT