இந்தியா

வெங்காயம் இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு

DIN

வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், அனைவருக்கும் கிடைக்கச் செய்வற்காகவும் அதனை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் லீனா நந்தன் வெளியிட்டாா். அவா் கூறியதாவது:

சில்லறை வியாபாரிகள் அதிகபட்சமாக 2 டன் மட்டுமே வெங்காயம் இருப்பு வைக்க முடியும். மொத்த வியாபாரிகள் 25 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும்.

விரைவில் வீணாகக் கூடிய அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்காக, அத்தியாவசியப் பொருள்கள் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் நிறைவேற்றியது என்றாா் அவா்.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, சில்லறை வியாபாரிகள் 2 டன் வரையிலும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான காரீஃப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டது. விளைச்சல் குறைந்ததால், கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை அதிரித்தது. இதையடுத்து விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT