இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கேரள மாநிலத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ஜனவரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்காக இருந்த நிலையில் தற்போது அது 4 லட்சத்தைத் நெருங்கியுள்ளது. நாட்டிலேயே கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.

இந்த நிலையில் கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7,084 பேருக்கு தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,86,088ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 25 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணக்கை 1,306ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,87,261 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 97,417 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT