இந்தியா

கர்நாடகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை; பெங்களூருவுக்கு எச்சரிக்கை

24th Oct 2020 01:02 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் பெங்களூரு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பெங்களூரு நகரின் முக்கியச் சாலைகள் உள்பட அனைத்துச் சாலைகளும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. பல்வேறு வீடுகளில் வெள்ள நீர் சூழந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெங்களூரு நகரின் ஆணையரை நேரில் அழைத்துப் பேசிய முதல்வர் எடியூரப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். 

ADVERTISEMENT

மேலும் வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அனைத்துத் தரப்பினரையும் எச்சரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஹோசகரேஹள்ளி, நயன்தஹள்ளி, பசவனகுடி, பொம்மநஹள்ளி, ராஜராஜேஸ்வரி நகர் உள்ளிட்டபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கை விடுக்குமாறும் முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT