இந்தியா

பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

24th Oct 2020 05:02 PM

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரின் கெரான் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு ட்ரோனை இந்திய ராணுவம் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. உளவு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ட்ரோனை இந்திய ராணுவத்தினர் சனிக்கிழமை காலை சுட்டு வீழ்த்தினர்.

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த இந்த ட்ரோன், இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 மீட்டர் தூரத்தில் பறந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஆயுதங்களைத் தாங்கி வந்த இதேபோன்றதொரு ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Jammu kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT