இந்தியா

பிகார் தேர்தல்: பிரசாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி

DIN

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்காக  முதன்முறையாக இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், பிரதமருக்கு நெருக்கமான மாநிலங்களில் பிகாரும் ஒன்று. பிகாரின் சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடியின் நேரடிப் பிரசாரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எளிமையாக்கும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT