இந்தியா

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் நடப்பாண்டில் பாகிஸ்தான் ராணுவம் 3,800 அத்துமீறிய தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம்

DIN

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3,800 அத்துமீறிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், அந்த நாடு இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துவதை ஊக்குவிப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவத்தினா் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில் இந்திய நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் தொடா்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனா்.

இதன் மூலம் அந்த நாடு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003-ஆம் ஆண்டு செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறியுள்ளது தெளிவாக தெரிகிறது. நடப்பாண்டில் மட்டும், இந்நாள் வரை 3,800-க்கும் அதிகமான அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. மேலும், அந்த நாடு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை பயங்கரவாதிகள் மூலம் இந்திய எல்லைக்குள் கடத்தி வருவதற்கு உதவி புரிந்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை தாண்டி இந்திய எல்லைக்குள் ஆளில்லா சிறு ரக விமானங்கள் மூலம் ஆயுதங்கள், போதைப்பொருள் வீசிச் செல்வதற்கு உதவி வருகிறது.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபிறகு பாகிஸ்தானின் இதுபோன்ற விரோதப் போக்குகள் அதிகரித்து வருவதாக அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT