இந்தியா

லடாக்கில் மேற்கொண்டுள்ள கட்டமைப்பு வசதிகள் சீனாவுக்கு சவால்: ஜெ.பி.நட்டா

DIN


சிம்லா: சீன எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அந்நாட்டுக்கு சவாலாக அமைந்துள்ளன என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் 6 பாஜக அலுவலங்களின் கட்டுமானப் பணிக்கு தலைநகா் தில்லியில் இருந்து காணொலி மூலமாக அடிக்கல் நாட்டிய ஜெ.பி.நட்டா கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து அருணாசல பிரதேசம் வரை எந்த கால சூழ்நிலையையும் தாங்கக் கூடிய 4,700 கி.மீ நீளமுடைய நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பெரிய ராணுவ பீரங்கி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லக் கூடிய வகையில் 14.7 கி.மீ நீளமுடைய இரண்டு வழிப்பாதை கொண்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சீனாவுக்கு சவாலாக அமைந்துள்ளன.

இந்த பாலங்கள் கட்டப்படுவதற்கு முன்பு இருந்த சிறிய பாலங்களில் பெரிய ராணுவ வாகனங்கள் கடக்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

அண்மையில் ஹிமாசல பிரதேசத்தின் ரோத்தாங் பகுதியில் 9.02 கி.மீ நீளமுடைய, முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்கப் பாதையை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். அடல் சுரங்கப் பாதை மாநில மக்களுக்கு உதவுவதுடன், நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக விளங்கும் என்று ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT