இந்தியா

'பிகார் தேர்தலைச் சந்திக்க பாஜகவுக்கு முகமில்லை'

DIN

பிகார் தேர்தலைச் சந்திக்க பாஜகவுக்கு முகமில்லாததால், தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவதாக ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ''பிகார் தேர்தலை சந்திக்க பாஜகவுக்கு முகமில்லை. அதனால் தான் தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டியிருந்தது. நிர்மலா சீதாராமன் இங்கு இருப்பதால் கேட்கிறேன் என்ற தேஜஸ்வி, பிகாருக்கு சிறப்புத் தொகுப்பு மற்றும் சிறப்பு மாநில அந்தஸ்தை ஏன் பாஜக அரசு வழங்கவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ''முதல்வர் நிதிஷ்குமார் குறித்து விமர்சித்த தேஜஸ்வி, நிதிஷ் குமார் எல்லாவற்றையும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிப்பார். ஆனால் அவற்றையெல்லாம் செய்வதற்கு நிதியாதாரம் போதுமானதாக உள்ளதா?. பிகாரை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பட்ஜெட்டில் உள்ள விதிமுறைகள் என்ன? அதனை எவ்வாறு மூலதனமாக பயன்படுத்த வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியாது'' என்று விமர்சித்தார்.

''பிகாரில் 60 சதவிகித பட்ஜெட் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 40 சதவிகித பட்ஜெட்டை அரசு பயன்படுத்தவில்லை. நிதிஷ் குமார் அரசின் பொறுப்பற்ற ஆட்சி, சலுகைகள், ஊழல், கட்டுப்பாடுகளற்ற விதிமுறைகளே காரணம். வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையை புதிய வளர்ச்சித்திட்டங்களுக்கும், மறுசீரமைப்புப் பண்களுக்கும் பயன்படுத்தியிருக்கலாம்'' என்று குற்றம் சாட்டினார்.


மேலும், ''வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், கரோனா பெருந்தொற்று காலங்களிலும் மக்களிடமிருந்து விலகுவதையே நிதிஷ் குமார் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் எதன் அடிப்படையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்'' என்று தேஜஸ்வி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT