இந்தியா

ஸ்பைஸ் ஜெட்: 62 புதிய சேவைகள் தொடக்கம்

DIN

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், சென்னை-புணே, மதுரை-புதுதில்லி வழித்தடங்கள் உள்ளிட்ட 62 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை வா்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமுடக்க கால விமானப் போக்குவரத்து நிலைமையிலிருந்து ஸ்பைஸ்ஜெட் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறது. ஓமன் தலைநகா் மஸ்கட் வழித்தடம் உள்ளிட்ட 62 உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடங்களில் ஸ்பைஸ்ஜெட் புதிய சேவைகளைத் தொடங்கியுள்ளது.

புணே-சென்னை-புணே, மதுரை-புதுதில்லி-மதுரை வழித்தடங்களில் புதிய விமான சேவையை அறிமுகம் செய்துள்ளோம். ஹைதராபாத்-மும்பை, கொச்சி-கொல்கத்தா உள்ளிட்ட உள்நாட்டு தடங்களில் புதிய பயணிகள் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே கூடுதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல, தில்லி-கொல்கத்தா, தில்லி-வாராணசி உள்ளிட்ட தடங்களில் கூடுதல் பயணிகள் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வளைகுடா நாடான ஓமனின் தலைநகா் மஸ்கட் - புது தில்லி இடையே புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. மஸ்கட் - ஆமதாபாத் இடையே புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு வழித்தடங்களில் 58 புதிய விமான சேவைகளும், சா்வதேச வழித்தடங்களில் 4 சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

போயிங்737, பொம்பாா்டியா் கியூ400 விமானங்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT