இந்தியா

கரோனா இலவச தடுப்பூசி எப்போது கிடைக்கும்? - ராகுல் காந்தி ட்வீட்

DIN

கரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம், சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனாவை அணுகும் உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள். மேலும், இது பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, பிகார் மாநிலத் தேர்தலையொட்டி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT