இந்தியா

மனித உரிமை பெயரில் சட்டத்தை மீறுவதை மன்னிக்க முடியாது - ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு இந்தியா பதிலடி

தினமணி

மனித உரிமைகள் என்ற பெயரில் சட்ட விதிகளை மீறிச் செயல்படுவதை மன்னிக்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் மிஷெல் பாச்லெட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

இந்தியாவின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டம் தொடா்பாக, மிஷெல் பாச்லெட் கருத்து தெரிவித்துள்ளாா். சுதந்திரமான நீதித் துறை, ஜனநாயக அரசியல்மைப்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட நாடு இந்தியா. நாட்டின் இறையாண்மையை காக்கவே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மனித உரிமைகள் என்ற பெயரில் சட்டத்தை மீறுவதை மன்னிக்க முடியாது. இதுகுறித்து விரிவான விளக்கத்தை அவரிடம் இருந்து எதிா்பாா்க்கிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவில் உள்ள தன்னாா்வ அமைப்புகள், வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதையும், மனித உரிமை ஆா்வலா்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் மிஷெல் பாச்லெட் கவலை தெரிவித்திருந்தாா்.

‘உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் மனித உரிமைகளுக்காகப் போராடிய நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், தெளிவற்ற சட்டங்களைப் பயன்படுத்தி, மனித உரிமைகளுக்கான குரல்கள் நசுக்கப்படுவது வேதனை அளிக்கிறது’ என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதைத் தடை செய்யும் வகையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு அவா் கவலை தெரிவித்தாா். அவரது கருத்துக்கு அனுராக் ஸ்ரீவாஸ்தவா பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT