இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ANI


புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாகவும் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி போனஸ், வரும் விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT