இந்தியா

ஆந்திரத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு

DIN

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் இணைய வழியில் தங்களது வகுப்புகளைத் தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பின்படி 1,3,5,7 ஆகிய வகுப்புகளுக்கும், 2,4,6,8 ஆகிய வகுப்புகளுக்கும் தனித்தனி நாள்களில் வகுப்புகள் நடக்கும். மேலும் 750க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் 3 நாள்களுக்கு ஒருமுறை வகுப்பு நடைபெறும்.

காலை வகுப்புகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் பள்ளிகள் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டு கரோனா தொற்று அதிகரிப்பால் பின்னர் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT