இந்தியா

காவலர் வீர வணக்க நாள்; தில்லியில் அமித் ஷா மரியாதை

21st Oct 2020 11:09 AM

ADVERTISEMENT
தில்லி: காவலர்களின் வீர வணக்க நாளையொட்டி தில்லியில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில்உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் சுட்டுரையில் மரியாதை செலுத்தியுள்ளார்.

நாட்டுக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்களின் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு இன்று காவலர்களின் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் தில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
Tags : Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT