இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க முதலீடு 7,800 கிலோ

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 7,800 கிலோ தங்கத்தை பாரத டேட் வங்கியில் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன்னிடம் உள்ள தங்கங்களை கடந்த 15 ஆண்டுகளாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய கோல்டு மானிடைசேஷன் திட்டத்தின் கீழ், 2.5 சதவீத வட்டி விகிதத்தில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்க தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் தங்க முதலீட்டைப் பெறும் வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே இருந்து வருகிறது. பல வங்கிகள் அதிக அளவிலான தங்க முதலீட்டைப் பெற முன்வருவதில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியில் தேவஸ்தானம் கடந்த 10 ஆண்டுகளாக தங்க முதலீட்டை செய்து வருகிறது.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் 7,800 கிலோ தங்கம் நிரந்தர வைப்பு நிதியின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளதே இதற்கு உதாரணம். 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சிறிது சிறிதாக தங்க வைப்பு நிதியின் கீழ் தேவஸ்தானம் தங்கத்தை முதலீடு செய்து வருகிறது என தேவஸ்தான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT