இந்தியா

தெலங்கானாவுக்கு தில்லி அரசு ரூ. 15 கோடி நிவாரண நிதி

20th Oct 2020 12:04 PM

ADVERTISEMENT

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு தில்லி அரசு சார்பில் ரூ. 15 கோடி நிவாரண நிதி அளிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். தொடர் மழை வெள்ளத்தால் தெலங்கானாவின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மாநிலங்கள் சில, தெலங்கானா அரசுக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிவாரண உதவி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதையடுத்து, தெலங்கானாவுக்கு தில்லி அரசு சார்பில் ரூ. 15 கோடி வழங்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

மேலும், மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT