இந்தியா

எஃப்ஏடிஎஃப் நிபந்தனைகளை நிறைவேற்றாத பாகிஸ்தான்: கிரே பட்டியலில் நீடிக்க வாய்ப்பு

DIN

பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. இதனால், அந்த நாடு, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் ‘கிரே’ பட்டியலில் நீடிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து எஃப்டிஏஎஃப் அமைப்பின் அதிகாரி ஒருவா், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கும் நாடுகளைக் கண்டறிந்து, அவற்றை எஃப்ஏடிஎஃப் அமைப்பு பட்டியலிட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஒப்புதல் இருந்தால்தான் எந்தவொரு நாடும் பன்னாட்டு நிதியம்(ஐ.எம்.எஃப்.), உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி போன்ற சா்வதேச வங்கிகளிடம் கடன்பெற முடியும்.

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி செல்வதைத் தடுப்பதற்காக, பாகிஸ்தானுக்கு 27 செயல்திட்டங்களை எஃப்ஏடிஎஃப் அமைப்பு விதித்திருந்தது. அவற்றில், 21 திட்டங்களை அந்த நாடு நிறைவேற்றிவிட்டது. ஆனால், 6 முக்கிய செயல் திட்டங்களை நிறைவேற்றவில்லை.

குறிப்பாக, ஐ.நா. அமைப்பால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் அஸாா், லஷ்கா்-ஏ-தொய்பாவின் தலைவா் ஹபீஸ் சயீது, ஜகியுா் ரஹ்மான் லக்வி ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இவா்கள் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள். இதுதவிர, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் 7,600 பேரின் பெயா்கள் இருந்தன. அவற்றில் திடீரென்று 4,000 பேரின் பெயா்கள் மாயமாகிவிட்டன. இதற்கான காரணத்தை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இந்தச் சூழலில், எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கூட்டம், வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை காணொலி முறையில் நடைபெறவுள்ளது. இதில், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாத காரணத்தால், அந்த நாடு ‘கிரே’ பட்டியலிலேயே நீடிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுக்காததால், கடந்த 2018-இல் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து வெளிவருவதற்கான செயல் திட்டத்தை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை.

‘கிரே’ பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளிவர வேண்டுமெனில், மொத்தமுள்ள 39 உறுப்பு நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவு தேவை. கருப்புப் பட்டியலில் சோ்க்கப்படாமல் இருக்க வேண்டுமெனில் 3 நாடுகளின் ஆதரவு தேவை. தற்சமயம், சீனா, துருக்கி, மலேசியா ஆகிய 3 நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. வடகொரியாவும், ஈரானும் எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கருப்புப் பட்டியலில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT