இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,984 பேருக்கு மட்டுமே கரோனா

19th Oct 2020 09:40 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,984 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,984 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,01,365 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 15,069 பேர் குணமடைந்துள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 13,84,879 பேர் குணமடைந்துள்ளனர், 42,240 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

1,73,759 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,431 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் 2,979 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால், 145 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT